இலங்கை அறிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்காத யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்கும்!

un_sl_india_001இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் இன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் இறுதி யோசனையின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினை தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த ஆதரவை இந்தியா வெளிக்காட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தொடர்பான இந்த யோசனையை அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அனுசரணையில் முன்வைத்துள்ளன.

இந்தநிலையில் யோசனையில் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளடக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவை பொறுத்தவரை குறித்த வெளிநாட்டு நீதிபதிகளை தவிர்த்த ஒரு யோசனைக்கு அது ஆதரவளிக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: