ஐ.எஸ். அமைப்பின் தலைமை பொறுப்பில் அமெரிக்கரா? பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

yasdi_america_001ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பொறுப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஜிகாதி ஒருவர் உள்ளதாக அவர்களிடம் பாலியல் அடிமையாக இருந்த யாஷ்டி இன பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்த நடா என்ற 19 வயது பெண் இது தொடர்பாக கூறியுள்ளதாவது, என்னை ஐ.எஸ். தீவிரவாதிகள் அபு அப்துல்லா அல் அம்ரிகி என்பவரிடம் விற்றனர்

அவர் அமெரிக்காவை சேர்ந்தவர். மேலும் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பிலும் அவர் உள்ளார்.

தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டம் தீட்டுபவராக அவர் இருந்து வருகிறார். தாக்குதல் நடத்துவதற்காக வரைப்படங்களை அவர் தயார் செய்து தருவார்.

எனினும் இதுவரை ஐ.எஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள எந்த புகைப்படங்களிலும் அவரது புகைப்படம் இடம் பெறவில்லை

ஒரு வேளை எதிர்களால் பிடிக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வதற்காகவே தனது கழுத்தில் விசம் நிரப்பப்பட்ட குப்பியை மாட்டி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் எப்.பி.ஐ தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

-http://world.lankasri.com

TAGS: