தந்தை செல்வாவின் உருவச்சிலை மீண்டும் புத்துயிர்பெற்றது

இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் அமைக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சி நிறுவுனர் தந்தை செல்வநாயகம் அவர்களின் உருவச்சிலை அண்மையில் சிங்கள பேரினவாதிகளினால் சிதைக்கப்பட்டது.

உவருச்சிலை சிதைக்கப்பட்ட செயலுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டன குரல்களை எழுப்பின. அதேவேளை சிதைக்கப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலையை புனர்நிர்மாணம் செய்து நேற்று மாலை திறந்துவைக்கப்பட்டது.

திருக்கோணமலை நகராண்மைக் கழகத் தலைவர் க. செல்வாராசா மற்றும் துணைத் தலைவர் சே. ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா சென்ற வேளையில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

தந்தை செல்வாவின் சிலை மீண்டும் நேற்று திறக்கப்பட்டபோது திருகோணமலை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் உட்பட நுற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.