இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்!- வாசுதேவ

vasudeva_nanayakkaraஇந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலான பிரச்சினை போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர்.

30 ஆண்டுகளாக இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமாக காணப்பட்ட ஓர் விடயத்தின் உரிமையையே நாம் கோருகின்றோம்.

இந்திய மீனவர்களின் படகுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி கூறுகின்றார். ஒரே நேரத்தில் 300 – 400 மீன் பிடிப் படகுகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது.

பல நாடுகளில் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது. ஐரோப்பாவிலும் இந்தப் பிரச்சினை காணப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

சர்வதேச மீன்பிடி சட்ட திட்டங்களுக்கு அமைய சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட வேண்டும்.

போர் தொடர்பில் மட்டுமா சர்வதேச உதவி கோரப்பட வேண்டும்? மீனவர் பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வு வழங்க முடியும்.

சீனப் படகுகள் இலங்கைக் கொடியுடன் இலங்கையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி எமக்கு வழங்கப்படுகின்றது.

கூட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவி இழக்கப்படும் மீன் வளத்தை கணக்கிட்டு அதற்காக இந்தியாவிடமிருந்து ஓர் தொகையை பெற்றுக்கொண்டு அதனை இலங்கை மீனவர்களின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும்  என வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: