எங்கள் மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது!– டக்ளஸ் தேவானந்தா

douglas-thevananda-01எங்களது மீன் வளத்தை இந்தியா கொள்ளையிடுகின்றது என ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் மீன் வளம் எமது மக்களுக்கே சொந்தமானது. வடக்கு மீனவர்கள் நீண்ட நாட்களாக இது குறித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

போர் காரணமாக 30 ஆண்டுகள் கஸ்டங்களை அனுபவித்த மக்களினால் போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் பூர்த்தியாகியும், அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை.

எமது மீன் வளம் கொள்ளையிடப்படுகின்றது, வடக்கு மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்.

இதனால் எமது கடற்பகுதி வளமற்ற பகுதியாக மாற்றமடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.

நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் ரூபா பெறுமதியான மீன் வளத்தை இந்தியர்கள் கொள்ளையிடுகின்றனர்.

கரையோரப் பாதுகாப்புப் பிரிவு நிறுவப்பட வேண்டும்.

மீன்பிடி வலைகள் மற்றும் மண்ணெண்ணை நிவாரணங்கள் பல மீனவர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்திய அரசாங்கத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: