கூடுதல் பதவிகள் வேண்டுமா? இன்னும் கடுமையாக உழையுங்கள்: மசீசவுக்குப் பிரதமர் அறிவுறுத்து

moreமசீச  இப்போதுள்ளதைவிட  மேலதிக  அரசாங்கப்  பதவிகளைப்  பெற  வேண்டுமென்றால்  சீனர்  சமூகத்தின்  ஆதரவை  இன்னும்  அதிகமாகக்  கொண்டுவர  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

“கொஞ்சம்  கொடுத்து  கொஞ்சம்  பெற  வேண்டும்.

“அதிகம்  வேண்டுமா, அதிகமாகக்  கொடுங்கள்.

“அரசாங்கத்தில்  கூடுதல்  பதவிகள்  தேவை  என்றால்  பிஎன்னுக்கு  உங்கள் ஆதரவும்  அதிகரிக்க  வேண்டும்”, என்று  மசீச  ஆண்டுக்கூட்டத்தில்  நஜிப்  கூறினார்.

மசீச 2013 பொதுத்  தேர்தலில்  ஏழு  நாடாளுமன்ற  இடங்களையும்  11  சட்டமன்ற  இடங்களையும்தான்  வென்றது  என்பதால்  அதை  மக்கள் ‘7-Eleven party’ என எள்ளி  நகையாடுவதைக்  கண்டு  வருத்தமடைவதாகக்  குறிப்பிட்டார்.

ஆனாலும்,  அது  ஆதரவைத்  திரும்பவும்  பெற  முடியும்  என்ற  நம்பிக்கை  தமக்கிருப்பதாக  அவர்  சொன்னார்.