கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநநேசதுரை சந்திரகாந்தன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணியளவில் பிள்ளையானை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வரும் பிள்ளையான், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
-http://www.tamilwin.com