மீண்டும் சில விமர்சனங்களை முன்வைக்க எரிக் சொல்ஹைம் முனைப்பு காட்டி வருகிறார். யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெல்லப்போகின்றது எனத் தெரிந்திருந்தும், விடுதலைப் புலிகளுக்காக இந்திய அரசாங்கம் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தவில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே அரசாங்கம் புலிகளுக்காக கண்ணீர் சிந்தியதா என்று மட்டும் தான் கேட்க்காத மிச்சம். ஆனால் குறித்த ஊட்காத்திற்கு எரிக் சொல்ஹைம் கருத்துச் சொல்லும்போது , இந்தியாவை பலமாக தாக்கி தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்பது இங்கே குற்ப்பிடத்தக்க விடையம் ஆகும்.
-http://www.athirvu.com
இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்றுவரை தமிழர்களின் துயரை ஒரு சிறு அளவாவது மனதார குறைத்திருக்குமா எனில் இல்லை என்பதுதான் விடை .ஒவ்வொரு கட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராகத்தான் [சிங்களவனுக்கு ஆதரவாக ]நடந்துகொண்டு உள்ளது