அரசியல் கைதிகள் எவரும் கிடையாது! நீதி அமைச்சர் மீண்டும் வாதம்!

vijaydasaஇலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என்ற தமது வாதத்தை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ள நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறைக் கைதிகள் தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நீதி அமைச்சினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் 225 பேர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு தொகுதி கைதிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி கைதிகளுக்கு தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அனைத்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் குண்டு வெடிப்பு மற்றும் கொலைகள் போன்றன தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என அமைச்சர் ராபஜக்ச சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என்ற தமது வாதத்தை அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

-http://www.tamilwin.com

TAGS: