விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991ம் ஆண்டு முதல் தன்னை இணைதுக் கொண்ட்வர் சிவகாமி. அனைவராலும் தமிழினி என்று அறியப்பட்டவர். புலிகளின் அரசியல் துறை , மற்றும் மகளீர் அணிப் பொறுப்பாளராகவும் அவர் கடமையாற்றி இருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் யுத்தத்தி தோல்வியைத தழுவிய சமயத்தில் , மக்களோடு மக்களாக அவர் சென்று சரணடைந்தார். ஏற்கனவே அவர் கான்சர்(புற்று நோயால்) பாதிப்படைந்து இருந்தார். மக்களோடு மக்களாக சரணடைந்து , பின்னர் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு அவரை எடுத்து மருத்துவம் கொடுத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார்.
ஆனால் முகாமில் சக தமிழர்களால் அவர் காட்டிக்கொடுக்கப்பட்டார். இதனால் சிங்கள ராணுவம் அவரை பிடித்து சிறையில் அடைத்தது. அவருக்கு வந்திருக்கும் கொடுமையான புற்று நோய் தொடர்பாக ராணுவத்திற்கு தெரியப்படுத்திய சிலர் , மேலதிக சிகிச்சைக்காக அவரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சினார்கள். தற்போது அறிக்கை விடும் அரசியல்வாதிகள் எவரும், அபோது எதனையும் செய்யாது முகட்டில் எலி ஊர்கிறதா என்று மட்டும் வேடிக்கை பார்த்தார்கள்.
வெளிநாட்டில் உள்ள சில தமிழர்களே , தமிழினியை எவ்வாறாவது வெளியே எடுத்துவிடவேண்டும் என்று கடும் பாடுபட்டார்கள். புலம்பெயர் தமிழர்கள் பலர் அவரது சிகிச்சைக்கு தம்மாலான பணத்தை அனுப்பி வைத்தார்கள். இலங்கையை விட்டு வெளியே சென்றால், தமிழினி காப்பாற்றப்படுவார் என்பது சிங்களத்திற்கு நன்றாக தெரியும். பின்னர் வெளிநாடுகளில் நடக்கும் , போரட்டங்களையும் அவரே முன் நின்று நடத்துவார் என்று கணக்கு போட்டது சிங்கள அரசு. அதுவே அவர்கள் இறுதிவரை தமிழினியை வெளிநாடு செல்ல அனுமதிக்கவில்லை. இன் நிலையில் கடும் புற்றுநோயால் அவர் உயிர் துறந்தார். உடனே ஊடகவியாளர்கள் , அரசியல்வாதிகள், செயல்பாட்டளர்கள் என்று தம்மை தாமே சொல்லிக்கொள்ளும் சிலர் , அறிக்கை மழை விடுகிறார்கள்.
உயிரோடு இருந்த வேளை , கஷ்டப்படும் வேளைகளில் உதவி செய்யமாட்டார்கள். இறந்த பின்னர் அறிக்கை மழை பொழிவார்கள். இதனால் யாருக்கு என்ன பயன் ? போன உயிர் திரும்பியா வரப் போகிறது ?
தமிழினி தமிழர்களுக்கு முன்மாதிரியாக இருந்த பெண். பாரதி கண்ட புதுமைப் பெண். அவரை பற்றி பேச, அவர் செய்த தியாகங்களை பற்றி சொல்ல வார்த்தைகள் கிடையாது எனலாம். அவர் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்…
-கண்ணன்
-http://www.athirvu.com