5 வருடங்களுக்கு முன்னர் காணமல் போன பிரகதீப் எக்னலியகொடவை இலங்கை அரசின் ஏஜண்டுகளே கத்திக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான ருயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இதுவரை 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும். அதில் உள்ள அனைவரும் முன் நாள் ராணுவச் சிப்பாய்கள் எனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்ற காலகட்டத்தில், புலிகள் பகுதிகள் மீது இலங்கை விமானப்படையினர் கிளஸ்டர் குண்டுகளை போட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனை சிங்கள இணையங்களில் செய்தியாக வெளியிட்டவர் எக்னாலியகொட. இதன் காரணமாகவே அவரை மகிந்த ராஜபக்ஷ அரசு கடத்தி பின்னர் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று சர்வதேச ஊடகமாக ருயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
-http://www.athirvu.com