மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது நாட்டுக்குப் பெருமை! ஜயதிஸ்ஸ எம்.பி.

channel4மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பது நாட்டுக்குப் பெருமையளிக்கும் விடயம் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

ராவய பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள நேர்காணலிலேயே இதனை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நளின் ஜயதிஸ்ஸ எம்.பி,

தேசிய அரசாங்கம் பெரிதாக எதனையும் சாதிக்கப் போவதில்லை. ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் கொள்கையளவில் ஒன்று என்பதன் காரணமாகவே அவர்களால் இணைந்து அரசாங்கத்தை நடத்திச் செல்ல முடிகின்றது.

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன.

ஆனால் தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் இணைந்து தங்கள் கட்சிக்காரர்களைப் பாதுகாப்பதற்காக குறித்த முறைப்பாடுக்ள தொடர்பில் சட்டமா அதிபர் ஊடாக வழக்குத் தொடராமல் காலத்தை இழுத்தடிக்கின்றனர்.

ஜெனீவா அறிக்கையை எடுத்துக் கொண்டால் அதனை எதிர்ப்பவர்கள் தமிழ், சிங்கள இனவாதிகள் மட்டுமே.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்குப் பெருமையாக இருக்கும்.

ஆனால் இதனை சாக்காக வைத்துக் கொண்டு மாகாண சபைகளை விட கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்றும் நளின் ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: