போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை. என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த 28ம் நாள் நடந்த “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஆதரவுடன், திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
அனைத்துலக செஞ்சிலுவைக் குழு ஊடாக விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்கு வலியுறுத்தும் ஒரு நகர்வு மேற்கொள்ளப்பட்டது.
சரணடையும் விடுதலைப் புலிகளை ஏற்றி வருவதற்கு ஒரு கப்பலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரண்டு நகர்வுகளுக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.
இதன் விளைவாகவே, வெள்ளைக்கொடியுடன் சரணடைய முனைந்தபோது, மரணங்கள் ஏற்பட்டன. என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிக் சொல்ஹெய்ம் தனது உரையில், சிறிலங்காவில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட போது தாம் எதிர்கொண்ட நெருக்கடிகள், சவால்கள் குறித்தும் விபரித்துள்ளார்.
-http://www.tamilwin.com
இந்த நோர்வே நாடுதான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மழுங்கடித்தது ..பின்னர் அமெரிக்க சார்பில் புலிகளை மழுங்கடித்தது …யாசிர் அரபாத் மீது பல குற்ற சாட்டுகள் உண்டு .எந்த உண்மை தலைவர்களும் சொந்த லாபத்திற்காக தம் மக்களை விற்பதில்லை …..இது உண்மை
ஈழத்தில் படுகொலை நடந்த சமயத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் …இந்த Eric Solheim முகத்தில் நீங்கள் இந்த பக்கம் வரகூடாது என்று சொன்னபோது வாலை சுருடிகொண்டு போனவர் இப்பொது கூவுகின்றார் ..இனி உலகில் எந்த இயக்கமும் இந்த நோர்வே யை சாமாதான விசயங்களில் தலயிட கனவிலும் அனுமதிக்காது