காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்ய உள்ளது. பலவந்த கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 9ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். அரசாங்கத்தின் அழைப்பிற்கு அமைய இந்தப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்ய உள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவின் கடந்த அரசாங்க ஆட்சிக் காலங்களில் இந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலவந்த கடத்தல்கள் காணாமல் போதல்களை தடுக்க தற்போதைய அசராங்கம் எவ்வாறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதனை பிரதிநிதிகள் ஆராய உள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட உள்ளது.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாத்தளை, திருகோணமலை, அம்பாறை மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பிரதிநிதிகள் விஜயம் செய்ய உள்ளனர்.
அரச அதிகாரிகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.
-http://www.athirvu.com