தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை வைத்து பலர் அரசியல் செய்கின்றார்கள்: எஸ்.வியாளேந்திரன்

amal_mp_visit_01அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை எந்தவொரு தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன், இந்த தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை வைத்துக்கொண்டு பலர் அரசியல் செய்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

தீபத் திருநாளாகிய இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சொந்த வீடுகளுக்குச் சென்று அவர்களை சந்தித்துச் செல்லும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இருந்த அரசியல் தலைமைகள் எவரும் தமிழ் அரசியல் கைதிகளின் வீடுகளுக்குச் சென்று குறித்த விடயம் தொடர்பாகவோ அல்லது அவர்களின் நலன் விசாரிப்பதற்குகூட இதுவரைக்கும் சென்று பார்வையிட்டதாக தெரியவில்லை.

ஒருவேளை சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல் வாடும் தமிழ் அரசியல் குடும்பங்களை வைத்து பலர் அரசியல் நடாத்துகின்றார்கள். இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கை முதலில் மாற்றம் அடைய வேண்டும்.

இன்று எங்களின் புலம்பெயர் உறவுகள் எத்தனையோ சமூக அமைப்புக்கள் கஸ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை ஒரு சில முகவர்கள் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கின்றார்கள் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என தெரியாது.

2009 ஆண்டில் இருந்து எந்தவொரு நபரும் இந்த தமிழ் அரசில் கைதிகளின் வீட்டு நிலைமையினை பார்க்கவும் இல்லை.

ஒரு நல்ல விடயம்கூட செய்து கொடுக்கவில்லை. நான் பல தடைவை தமிழ் அரசியல் கைதிகளின் வீடுகளுக்குச் சென்று பார்த்தவுடன்தான் தெரியும் அவர்கள் எவ்வாறான துன்பத்தையும் கஸ்டத்தையும் அடைந்திருக்கின்றார்கள் என,

எனவே தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: