சம்பந்தன் மீது முழு அளவில் நம்பிக்கை உள்ளது: தர்மலிங்கம் சித்தார்தன்

sam_siththarth_001சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எந்த வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் லங்காசிறி செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்மைப்பு எனும் போது இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே இந்த விடயம் குறித்து பேசி வருதாக அவர் கூறினார்.

எனினும் தனக்கு இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தான் உள்ளிட்டவர்கள் இரா.சம்பந்தன் ஐயா மீது முழு அளவில் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யவேண்டும் என்பதில் இரா.சம்பந்தன் கடுமையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக பெருந்துயரத்துக்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தர்மலிங்கம் சித்தார்தன், அவர்களின் விடுதலையை வலியுறுத்துவதே தமது நிலைப்பாடு எனவும் கூறினார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக தனியாக இருவர் மட்டுமே செயற்படுவதானால் மக்கள் மத்தியில் சந்தேகம் தோன்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றினைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி வலியுறுத்தும் பட்சத்தில் இந்த விடயத்தின் பாரதூர தன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என தர்மலிங்கம் சித்தார்தன் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: