ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை

Selvam_Adaikalanathanஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி ஒருமித்த முடிவை எடுக்காத காரணத்தினால் நாளை செவ்வாய்க்கிழமை(16) இடம் பெறவுள்ள ஜெனிவா தீர்மானம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானத்தை இலங்கையில் நடை முறைப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

ஏற்கனவே இடம் பெற்ற அரசியற் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆலோசனை கூட்டமாக இடம் பெற்றது.

இந்த நிலையில் அரசியற் கட்சிகளின் ஆலோசனைகளை அனுப்புமாறு ஜனாதிபதியினால் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் ஆலோசனை எடுப்பதற்காக கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி நாளை(செவ்வாய்க்கிழமை)சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒருமித்த முடிவை ஜனாதிபதி எடுக்காத நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) சார்பாக குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilcnnlk.com

TAGS: