நேற்று பட்ஜெட்டை நிராகரிக்கும் முயற்சியில் எதிரணி தோற்றுப்போனது பற்றி பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கின் ருத்தைக் கேட்டதற்கு, “முயற்சியே செய்யாமலிருப்பதை விட முயன்று தோல்வியடைவது மேல்” என்றார்.
“நாங்கள் வெற்றிபெறவில்லைதான். ஆனால், பட்ஜெட்டைப் பொருத்தவரை நஜிப் பாஸின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது”, என லிம் பினாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட்ஜெட் மக்களுக்கு நன்மை அளிக்கிறது என்பதால் பாஸ் அதை ஆதரிப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறியதை லிம் சுட்டிக்காட்டினார்.
“மக்கள் பொருள், சேவை வரியால் (ஜிஎஸ்டி) பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ரிங்கிட்டின் மதிப்புக் குறைவதைத் தடுக்கவும் அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பிறகு அது எவ்வகையில் மக்களுக்கு நன்மையாக அமைகிறது என்பது எனக்குப் புரியவில்லை”, என லிம் குறிப்பிட்டார்.
“ஹாடியின் கூற்று பாஸ் ஜிஎஸ்டியையும் பிஎன் அரசாங்கத்தின் நடப்புக் கொள்கைகளையும் ஆதரிப்பதைக் காண்பிக்கிறது.
“மறைமுகமாக 1எம்டிபி ஊழல்களும் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் நன்கொடை செலுத்தப்பட்டதும் பாஸுக்கு ஏற்புடைய செயல்களே என்பதும் புலனாகிறது”, என்றாரவர்.
ஆனாலும், பட்ஜெட்டை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பதில்லை என்ற கட்சியின் முடிவையும் மீறிச் செயல்பட்டார்கள் மூன்று பாஸ் எம்பிகள் என்று குறிப்பிட்ட லிம், அவர்களை “வீரர்கள்” எனப் பாராட்டினார்.
பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார், பாசிர் பூத்தே எம்பி நிக் மசியான் நிக் முகம்மட், குபாங் கிரியான் எம்பி அஹ்மட் பாய்ஹாகி அதிகுல்லா ஆகியோரே அம்மூவருமாவர்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எது எப்படி ஆனாலும் இவங்களின் மட்டரக புத்தியை ஒருநாள் காண்பித்து விடுவான்கள்- சீனர்களும் நம்மவர்களும் நம்மவர்களின் மக்கள் தொகையை அதிகரித்து இருக்க வேண்டும் எப்போது காகாதிமிர் குடும்ப கட்டுப்பாட்டை குடும்ப விருத்தி ஆகா ஆக்கினானோ அன்றிலிருந்து– ஆனால் நமது துப்பு கெட்ட நாதாரிகள் நம்மை பிரதிக்கின்றான்கள் என்று நம்மை விற்று விட்ட துரோகிகள் ஒன்றுமே செய்யாமல் இன்றும் சப்பிக்கொண்டிருக்கின்றான்கள். ஒரு காலகட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதோர் அதிகம் இருந்தனர்.
நம் இன பெண்கள் ஜன தொகை பெருக்க மறுக்கின்றனர்.அதற்கு ஜால்ரா போடும் குடும்ப தலைமையும்,ஜன பெருக்கம் ஒன்றே சமுகம் வுயர்வுக்கு வழி வகுக்கும்.மற்ற ஹிந்து தன் மக்களை தொகையை பெருக்கிவிட்டால் துணிந்து விட்டால் பிறகு வருந்தாதே,
வாழ்க நாராயண நாமம்.
செருப்பால்
அடிச்சமாதிரி
இருந்துச்சா