அம்னோ தலைவர் நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்று ஐந்து மாநிலங்களிலிருந்து இன்னும் 34 அம்னோ கிளைகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், ஜொகூர், பேராக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அம்னோ கிளைகள் இதனை அறிவித்ததாக சினார் ஹரியான் செய்தி கூறுகிறது. பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று இக்கிளைகள் ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளன.
செய்திகள்நவம்பர் 22, 2015
உண்மையிலேயே இந்த 34 அம்னோ கிளைகள் நஜிப்பின் தலைமைத்துவத்தில் நம்பிக்கை இழந்து விட்டதா ? அல்லது நஜிப்பின் “நன்கொடை” போத வில்லையா ? அல்லது நஜிப்பின் “நன்கொடை”கிடைக்க வில்லையா ? என்பதை ‘சினார் ஹரியான்’ விளக்கமாக செய்தி வெளியிட்டு இருந்தால் மற்ற அம்னோ கிளைகளுக்கும் உதவியாக இருந்திருக்கும்.
குறள் 381
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
வும்னோ சமுகத்திற்கு வாறிவலங்கவில்லை ஆதலால் நஜிப் தகுதிஅற்றவர்.இப்படிதான் ஹிஷாமுடின் செய்தார் இப்போது அடக்கமாக இல்லையா,
நாராயண நாராயண.
கொ.. உள்ள umno கிளை தலைவர்கள் நல்ல வேல நம்ம MIC சப்பிகள் போல இல்லை .