பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ். அருட்செல்வன் அவருக்கு எதிரான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
பிப்ரவரி 10-இல் முகநூலில் நிந்தனைக்குரிய பதிவை இட்டிருந்தார் என அவர்மீது 1948 தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (சி)-இன்கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
அருள் அவரது பதிவில் அப்போது எதிரணித் தலைவராக இருந்த அன்வார் இப்ராகிமுக்கு இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறைகூறியதுடன் நீதிமன்றங்கள் தனித்து இயங்கவில்லை என்றும் அரசியல் சார்புடன் செயல்படுவதாகவும் கூறியிருந்தாராம்.
இவ்வாறு கருத்துரைத்ததற்காக இணைய வசதியைத் தவறாக பயன்படுத்தினார் என தொடர்பு, பல்லூடகச் சட்டம் பகுதி 233(1) (ஏ)-இன்கீழ் மாற்றுக் குற்றச்சாட்டு ஒன்றையும் அருள் எதிர்நோக்கியுள்ளார்.
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிர்நுடின் அஹ்மட் ரிம5,000 பிணையிலும் ஒருவரின் உத்தரவாதத்திலும் அருளை விடுவித்தார்.
























இருக்கின்ற சட்ட வரம்பிற்குள் அரசியலை நடத்த பழகிக் கொள்ளுங்கள். .
Salem Parthiban feeling funny.
26 mins ·
ஈழவிடுதலைக்காக மலேசியாவில் மாநாடு – வைகோ .
நல்ல வேளை இனபடுகொலையாளி இரசாபக்சே கட்சிக்கு தமிழகத்தில் கிளைகள் ஏதும் இல்லை
இருந்திருந்தா , அவனோடும் கூட்டணி அமைத்து , ஈழவிடுதலைக்காக போராடியிருப்பாங்க நம்ம டொபாக்கோ கோபால்சாமி நாயடும் . திருமாவளவனும் .
( கம்யூனீஸ்ட்டுகளோடு கூட்டணிக்காக ஈழ கோரிக்கையை கைவிடுறோம்னு 2 பேரும் கொஞ்ச நாளைக்கி முன்னதான் சொன்னாங்க )
அருள்செல்வமுடன் சில போராட்டத்தில் இறங்கிய அனுபவம் வுண்டு.காவல் படையால் தாக்கபட்டு லோக்காபில் அடைபட்டும் இருந்த அனுபவம்முண்டு,துவன் நசிர் சிறந்த தலைவர்/போராட்டவாதி,வாழ்க நாராயண நாமம்.