ஐ.நா குழு வெளியிட்டுள்ள தகவல் போலியானது! முன்னாள் அமைச்சர் பீரிஸ்

Sri Lankan Foreign Minister G.L. Peirisதிருகோணமலை கடற்படை முகாமை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவொரு நாடும் வெளிநாட்டு குழுக்களை தமது நாட்டின் கடற்படை முகாம்களுக்குள் இதுவரை அனுமதிக்கவில்லை என சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், தற்போதைய அரசாங்கம் ஐ.நாவின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் போதல் தொடர்பான நடவடிக்கை குழுவை கடற்படை முகாமை கண்காணிக்க அனுமதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முகாமிற்கு விஜயம் செய்த பின்னர் ஐ.நாவின் நடவடிக்கை குழு போலியான தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா நடவடிக்கை குழுவினரின் தகவல்களுக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 20 புலனாய்வு அதிகாரிகளை கைது செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்

திருகோணமலை கடற்படை முகாமிலுள்ள நிலக்கீழ் இரகசிய அறைகளைக் கொண்ட பகுதி குறித்து கேள்வி எழுப்பியிருந்த ஐ.நா நடவடிக்கை குழுவினர், காணாமல் போனதாக கருதப்படும் நபர்களை தடுத்து வைப்பதற்கு அவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

-http://www.tamilwin.com

TAGS: