இலங்கை,உலகத்துக்கு உதாரணமாக விளங்குமாம்: அமெரிக்கா

america_sri_lanka_001இலங்கையில் நல்லிணக்கத்திலும் மீள்கட்டுமானத்திலும் ஏற்படும் வெற்றி உலகத்துக்கு உதாரணமாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது

இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் அரசியல்துறை உதவிசெயலாளர் தோமஸ் செனொன் திருகோணமலையில் வைத்து இந்த கருத்தை இன்று வெளியிட்டார்.

இலங்கை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னேற்றங்களை கண்டுவருகிறது.

சமூக நிறுவனங்களும் இலங்கையர்களின் வாழ்க்கை தரங்களை முன்னேற்ற முயற்சித்துவருகின்றன.

இலங்கையின் கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிகளை வழங்கிவருகிறது. தற்போது 23 மில்லியன் டொலர்கள் வரை அமெரிக்கா உதவியாக வழங்கியுள்ளது என்றும் தோமஸ் செனொன் தெரிவித்தார்.

இந்தநிலையில் இலங்கையின் வரலாற்று ரீதியான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்றும் செனொன் குறிப்பிட்டார்.

செனொன் இந்த விஜயத்தின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

-http://www.tamilwin.com

TAGS: