இராணுவ அதிகாரியை விசாரியுங்கள்! ஆதாரத்துடன் தகவல் வழங்கிய சகோதரி !

பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சாட்சியத்தின் பின்பே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.எனது அண்ணாவான பேரம்பலநாதன் பிரதீபன் (வயது36) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 19 வருடங்களாக இருந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் அவரைப் பற்றிய தகவல் எவையும் எமக்கு கிடை க்கவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு சனல் 4 ஊட கத்தில் இறுதியுத்தத்தின் போது கைது செய் யப்பட்ட ஒருதொகுதியினர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் எனது அண் ணனை கண்டேன் அவர் உயிருடன் இருந்தார். அவருடன் எமது உறவினர்கள் சிலரும் இருந்தனர்.

மற்றுமெரு புகைப்படத்தில் இராணுவத்தினர் எனது அண்ணனுடன் இருப்பவரை அழைத்துவரும் போது எடுக்கப்பட்ட புகைப் படமும் உள்ளது. அவரும் எனது உறவினர்களில் ஒருவர். ஆவரை அழைத்துவரும் இராணுவ அதிகாரியை விசாரணை செய்தால் எனது அண்ணாவை பற்றிய தகவலை பெற்றுக் கொள்ளமுடியும்.கடந்த 2014 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி இணையத்தளம் ஒன்றில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடைய விபரம் வெளியாகியிருந்தது. அதிலும் எனது அண்ணாவின் பெயர் உள்ளது. ஆவரை தேடி பூசா தடுப்புமுகாம், மற்றும் வெலிகடை, மகசீன் சிறைச்சாலைகளுக்கு சென்றேன். அங்கு அவரைப் பற்றிய தகவல் எவையும் கிடைக்கவில்லை.

அனைத்து இடங்களிலும் முறைப்பாடு செய்துள்ளேன். தற்போது எனது அண்ணா இராணுவத்திடம் உயிருடன் இருந்த ஆதாரத்தையும் பெற்று உங்களிடம் கையளித்துள்ளேன். இனியும் தாமதிக்காமல் உரிய இராணுவ அதிகாரியை அழைத்து விசாரணை செய்து எனது அண்ணாவை பற்றிய தகவலை பெற்று என்னிடம் அவரை மீட்டுத்தாருங்கள் என கண்ணீருடன் மிக உருக்கமாக விசாரணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டார்.

-http://www.athirvu.com

TAGS: