‘’இஸ்லாமியர்கள் நுழையாதவாறு அமெரிக்க எல்லைகளில் சுவர்களை எழுப்புவேன்”: டோனால்ட் ட்ரம்ப்

donald_wall_001இஸ்லாமியர்கள் நுழையாதவாறு சீன பெருஞ்சுவர் போன்று அமெரிக்க எல்லைகளை சுற்றி சுவர்களை எழுப்பி இஸ்லாமியர்களை தடுப்பேன் என அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளரான டோனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய டோனால்ட் ட்ரம்ப், தான் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய அகதிகளை அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தடை செய்வேன் என கடந்த வாரம் பேசியது உலகம் முழுவதும் பலத்தை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்னதாகவே தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

லாஸ் வேகஸ் நகரில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன் தினம் டோனல்ட் ட்ரம்ப் கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய ட்ரம்ப், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால், இஸ்லாமியர்களை நாட்டிற்குள் நுழைய தடை செய்ப்படும் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.

கூடுதலாக, சீன பெருஞ்சுவர்களை போன்ற சுவர்களை அமெரிக்க எல்லைகளில் எழுப்பி இஸ்லாமியர்கள் நுழையாமல் தடுப்பேன். இவ்வாறு செய்வதனால், சட்டவிரோதமாக அமெரிக்க நாட்டிற்குள் நுழையும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற அகதிகளும் தடுக்கப்படுவார்கள்’ என பேசியுள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல், எல்லைகள் சுற்றிலும் சுவர்களை எழுப்ப உத்தரவிடுவேன் என டோனால்ட் ட்ரம்ப் தற்போது கூறியிருப்பது அமெரிக்க குடிமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

-http://world.lankasri.com