நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் செயலகம் ஒன்றை அமைக்கவுள்ளது
இந்த செயலகம், எதிர்காலத்தில் காணாமல் போனோர் மற்றும் நல்லிணக்கம், வன்முறைகளை தடுக்கும் ஆணைக்குழுவை போன்று மேம்படுத்தப்படவுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பரிந்துரைகள், போன்றவற்றின்
முன்னேற்றங்களையும் இந்த செயலகம் கண்காணிக்கும்.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் இயங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாற்றுக் கொள்கைக்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி நேர்காணப்பட்ட 2100 பேரில், 80.6வீதத்தினர் இலங்கையில் இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்கள் தேடப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதில் 87.6 வீத முஸ்லிம்களும் 80.1 வீத சிங்களவர்களும் 79.3 வீத மலையக தமிழர்களும் 78.4வீத இலங்கை தமிழர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் 48.7 வீத சிங்களவர்களும், 74வீத தமிழர்களும், 84.2 வீத மலையக தமிழர்களும், 86.5 வீத முஸ்லிம்களும் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
-http://www.tamilcnnlk.com