வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியல் அற்ற புதிய அமைப்பு ஒன்றை அமைத்துள்ளமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முதலாவது பிளவு என்று இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவை என்ற இந்த அமைப்பு நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன்பின்னர் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த அமைப்பு நிறுவப்பட்டபோது 15முதல் 30வரையானவர்களே சமுகமளித்துள்ளனர்.
எனினும் வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பங்கேற்றார். ஆனாலும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தல் காலம் முதல் விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை இந்திய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
-http://www.tamilwin.com
இந்த குழப்பத்திற்கு யார் கரணம் என்று ஈழ தமிழர்கள் தெளிவாக அறிவார்கள் ..