சுதந்திரத்தின் பின் முதல் தடவையாக இலங்கையின் யாப்பை தயாரிக்கும் தமிழ் கட்சிகள்!

srilanka_flagஇலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் பொது அமைப்புக்களும் இணைந்து இலங்கை நாட்டுக்கான அரசியல் யாப்பை உருவாக்குகின்றன என  இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

1972, 1978 ஆகிய அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களின்போது தமிழர்கள் அதில் பங்கேற்கவில்லை.

1972ஆம் ஆண்டில் யாப்பில் உத்தியோகபூர்வ மொழி சரத்தை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நீக்கவில்லை.

எனினும் 1978ஆம் ஆண்டு யாப்பில் ஜே ஆர் ஜெயவர்த்தனா அதனை நீக்கினார்.

இந்தநிலையிலேயே தமக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று கூறி தமிழர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைத்தனர்.

இதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதியன்று இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதில் இனப்பிரச்சினைக்கு தீர்வு விடயங்களும் உள்ளடக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மத்தியிலேயே யாழ்ப்பாணத்தில் புதிதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனால் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை ஜனவரி 2ஆம் திகதியன்று தமிழ் மக்களின் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் உப குழுவை அமைக்கவுள்ளது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: