நிறைவடையும் இந்த ஆண்டில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிடத்தக்க ஜனநாயக மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் சமாதானத்தை நோக்கிச் செல்ல முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் இலங்கை, நைஜீரியா, மியன்மார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் ஜனநாயகம் கணிசமான அளவு மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பொஸ்டன் குளோப்” செய்தி தாளிற்கு ஜோன் கெரி வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று எதிர்வரும் காலங்களில் ஏனைய நாடுகளில் ஜனநாயகம் மேலோங்க அமெரிக்கா முழு ஆதரவினையும் வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com