இயக்கத்தில் இணைய அழைப்பு விடுத்த ஐ.எஸ். தலைவர்: சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்த இஸ்லாமியர்கள்

isis_leader_001ஐ.எஸ்.தலைவர் தமது இயக்கத்தில் இணைந்து போராட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை சமூக வலைத்தளங்களில் அவர்கள் கிண்டலடித்துள்ளனர்.

ஐ.எஸ்.குழுவின் தலைவரான அல் பக்தாதி தங்களது குழுவில் இணைந்து போராட வேண்டும் என இஸ்லாமியர்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் அல் பக்தாதியை கிண்டலடித்துள்ளனர்.

அடுத்த ஸ்டார் வார்ஸ் திரைப்படம் வெளியாகும் முன்னர் தாம் இறக்க விரும்பவில்லை என ஒரு இளைஞர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இன்னொருவர், தமது தாயார் Couscous தயார் செய்துள்ளதாகவும், வேண்டுமெனில் அடுத்தமுறை சந்திக்கலாம் எனவும் கிண்டலடித்துள்ளார்.

ஒருவர், தாம் உண்மையான இஸ்லாமியராக இருப்பத்தில் கவனம் செலுத்துவதாகவும், தேவையானவர்களுக்கு உதவி செய்தும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அல் பக்தாதி புதிதாய் வெளியிட்டுள்ள ஒலிநாடாவில், இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனம் குறித்து தாங்கள் மறந்துவிடவில்லை எனவும், மிக விரைவில் முஜாகிதீன்களின் காலடி ஓசையை நீங்கள் கேட்ப்பீர்கள் எனவும் அல் பக்தாதி தெரிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியா பகுதிகளில் கூட்டுப்படையினரால் அதிக இழப்பினை சந்தித்து வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்,

தங்கள் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கவே நீண்ட 7 மாதங்களுக்கு பின்னர் ஒலி நாடா பதிவினை வெளியிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

-http://world.lankasri.com