பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை மீள்குடியேற்றம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார அமர்வு ஒன்றில் பங்கேற்கும் நோக்கில் பிளயர் இலங்கை வந்துள்ளார்
இந்தநிலையில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பிளயர் முக்கிய சமாதான ஏற்படுத்துனராக செயற்படுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
-http://www.tamilwin.com