1எம்டிபி, பண்டார் மலேசியாவில் 60 விழுக்காடு பங்குரிமையை சீனாவுக்கு விற்றது தொடர்பில் செய்துகொள்ளப்பட்ட விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா வலியுறுத்தினார்.
“1எம்டிபி ரியல் எஸ்டேட், இஸ்கண்டர் வாட்டர்ஃபுராண்ட் ஹொல்டிங்ஸ்- சைனா ரயில்வே எஞ்சினியரிங் கார்ப்பரேசன்(IWH-CREC) கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் குழப்பம் ஏற்படாதிருக்க அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்”, என புவா கூறினார்.
“பண்டார் மலேசியாவின் மொத்த நிலத்தின் பெறுமதி ரிம12.35 பில்லியன் என IWH-CREC மதிப்பிட்டிருப்பதாக 1எம்டிபி அறிவித்தது. அதன்படி பார்த்தால் அந்தக் கூட்டமைப்பு வாங்கியுள்ள 60 விழுக்காட்டு நிலத்தின் மதிப்பு ரிம7.41 பில்லியன்”, என்றாரவர்.
அதே வேளை, சைனா ரயில்வே நிறுவனம், பண்டார் மலேசியாவில் 60 விழுக்காட்டு நிலத்தைப் பெற ரிம5.279 பில்லியன் கொடுக்கப்படும் என ஹாங்காங்கில் அறிவித்துள்ளது.
விலையில் “பளிச்சென்று தெரியும் இந்த வேறுபாடு” ஏன்? மார்க்கெட்டில் எழுந்துள்ள குழப்பத்தை 1எம்டிபி-தான் தீர்க்க வேண்டும் என்று புவா கூறினார்.
அடுத்த அறிக்கை….. OSA க்கு உட்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தை பொதுவில் வெளியிட முடியாது.. என்ன சரிதானே????
இவை அணைத்து DAP யின் சதி……….. முதலில் 1எம்டிபி மிக பெரிய உழல் என்று தாம்பட்டம் அடித்தது அதனால் வெளிநாட்டு நிறுவனம் எதுவும் அதை வாங்க முன் வர வில்லை . பிறகு சீனாவில் உள்ள அவர்கள் நிருவமே அதை அடிமாட்டு விலைக்கு வாங்கி உள்ளது . எது எப்போடியோ இனி வரும் காலத்தல் I கோலாலும்பூரில் இந்தியர்களும் மலைய்காரர்களும் வாழ முடியாது பல தெரிகிறது