ரிம 2.6 பில்லியன் அரசியல் நன்கொடை, எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக் கூறப்படும் ரிம42 மில்லியன் ஆகியவை பற்றிய விசாரணைகளின் முடிவுகள்மீது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் நடவடிக்கை எடுக்காது என்று டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதைச் சட்டத்துறைத் தலைவர் நிராகரித்தார்.
அவ்விவகாரங்களில் தாம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளப்போவதாக சூளுரைத்த அபாண்டி, முன்னாள் பிரதமர் தம்மிடம் நேர்மாறான உளவியல் தந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்றார். அதாவது, தாம் விரும்புவதை அபாண்டி செய்ய வேண்டும் என்பதற்காகவே மகாதிர் அபாண்டி நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்று கூறுகிறாராம்.
மலேசியாகினியிடம் பேசிய அபாண்டி, தாம் நேர்மையாகவும் சரியாகவும் நடந்து கொள்ளப்போவதாகத் தெரிவித்தார்.
சட்டத்துறை தலைவரின் நேர்மை இன்னும் சில நாட்களில் வெளிச்சமாகும். ஏற்கனவே மத்திய வங்கி சமர்ப்பித்த விசாரணை பரிந்துரைகளை தொழில்நுட்ப காரணத்தைக் காட்டி புறக்கணித்தார். என்ன தொழில்நுட்ப குறை என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்…குறை இருப்பின் மீண்டும் விசாரிக்குமாறு பரிந்துரைதிருக்கலாமல்லவா???
எல்லாமே புழுகு மூட்டைகல் தான் !!!!!!!!!
இவன் முகத்தை பாருங்கள் satan முகமாறியே தெரிகிறதை கவனிக்கவும்