கடுமையான நிலைப்பாடுகள் அரசியல் தீர்வினை அடையும் வழிகளை பாழடித்துவிடும்: சம்பந்தன்

sambanthan press meetகடுமையான நிலைப்பாடுகள் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை பாழடித்துவிடும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா.சம்பந்தன் கூறியுள்ளதாவது, “கடும்போக்குத் தன்மையை கடைப்பிடிப்பதன் நாட்டின் முன்னிலையில் காணப்படும் அரிய சந்தர்ப்பத்தை மக்கள் கெடுத்துவிடக்கூடாது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கட்சியின் கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை தேர்தல் விஞ்ஞாபனங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டன. தேசிய, மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் எமது கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதன் அடிப்படையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்களே தற்பொழுது சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். அரசியல் தீர்வு தொடர்பான எந்தவொரு தரப்பினதும் கருத்துக்களை செவிமடுப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். எனினும் சி.வி.விக்னேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இணைந்திருப்பது துரதிஷ்டவசமானது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. செயற்பாடுகளை நாம் அதானித்து வருகின்றோம். எனினும், மக்கள் விவேகமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் சரியான முடிவுகளை எடுப்பார்கள்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: