ஒரு லட்சம் உயிர்களை காவு கொண்ட போர் இனி வேண்டாம்! மைத்திரி

maithri1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்புபேரவையாக மாற்றும் அறிவிப்பை இன்று வெளியிட்டு உரையாற்றும் போதே  ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

தம்மை பொறுத்தவரை 1972ஆம் ஆண்டிலும் 2009ஆம் ஆண்டிலும் ஒரு லட்சம் பேரைக்காவுகொண்ட சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் 21ஆம் நூற்றாண்டுக்கு அவசியமான அரசியல் அமைப்பு ஒன்று இலங்கைக்கு தேவை. இதன்மூலம் இலங்கையின் அனைத்து இனங்களும் அமைதியாக வாழவழியேற்படவேண்டும்.

இதன்காரணமாக நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து நாடாளுமன்றத்தை பலப்படுத்த முன்வந்ததாக மைத்திரிபால குறிப்பிட்டார்.

தெற்கின் தீவிரவாதமும் வடக்கின் தீவிரவாதமும் காரணமாகவே ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களை காவுக்கொண்டன.

எனவே இலங்கையில் மீண்டும் ஒருமுறை இனப்போர் ஒன்று ஏற்படுவதை தடுக்கவே புதிய அரசியல் அமைப்பு முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தம்மை பொறுத்தவரை நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டும் போர் ஒன்று ஏற்படுவதை தடுக்க முனைவதாக மைத்திரிபால மேலும் கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: