2009ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் பரவலாக பல இடங்களில் கொலை கற்பழிப்பு மற்றும் சித்திரவதைகள் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது. ஆனால் இவை அனைத்தும் சரியாக ஆவணப்படுத்தப்படுவது இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இது இவ்வாறு இருக்க , முன்னர் ஐ.நாவின் மனித உரிமை விசாரணைக் குழுவில் அங்கம் வகித்த ஜஸ்மின் சூக்கா அவர்கள் , இதுபோன்ற சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதை ஆவணப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான விடையம் என்னவென்றால், இதுபோன்ற சித்திரவதைகள் கடந்த 2015ம் ஆண்டில் கூட இடம்பெற்றுள்ளது.
இதில் பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லாட்சி நிலவுவதாகவும். இதனால் சமாதானத்தை பேசி தமிழர்களுக்கு ஒரு தீர்வு திட்டத்தை பெறுவது நல்லம் என்றும் பலர் கூறிவரும் நிலையில். இலங்கையில் இன்னும் ராணுவத்தின் ஆட்சியே இடம்பெற்று வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
-http://www.athirvu.com