யாழ்ப்பாணத்தில் ஒரு பற்றையும் காலியாக இல்லை- காதல் ஜோடிகள் !

jaffயுவதியொருவரைக் கூட்டிச் சென்று பற்றைக்குள் மறைத்து வைத்திருந்த இளைஞரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் நேற்று முன் தினம் உத்தரவிட்டார். வரணி, இயற்றாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரை காதலித்துள்ளார். யுவதியை அழைத்துச் சென்ற குறித்த இளைஞன், இரண்டு நாட்களாக யுவதியை பற்றைக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து, யுவதியின் உறவினர்கள் தேடி வந்தபோது, அவரை கைவிட்டுவிட்டு இளைஞன் தலைமறைவாகிள்ளார். இது குறித்த பெண்ணின் அனுமதி இன்றி நடைபெற்றுள்ளது என்கிறார்கள். இதனால் பொலிசார் இளைஞரைக் கைது செய்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இது இவ்வாறு இருக்க யாழ் எங்கிலும் பற்றை என்றாலே அங்கே காதலர்கள் பதுங்கி இருப்பார்களோ என்று கேட்க்கும் அளவு நிலமை மாறிவிட்டது.

இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டு தான் சிங்கள அதிகாரி ஒருவர் இனி நாட்டில் , போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படமாட்டாது என்று எதிர்வு கூறினாரோ தெரியவில்லை.

-http://www.athirvu.com

TAGS: