பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டது ஒரு யுத்தக் குற்றச் செயல்- கூறுவது யார் தெரியுமா ?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை ஒர் யுத்தக் குற்றச் செயலாகும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரபாகரனின் புதல்வரை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை யுத்தக் குற்றச் செயல்; என்ற போதிலும் படையினர் அதனை மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலசந்திரன் தொடர்பில் ஒரு வீடியோவும் இரண்டு புகைப்படங்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும்,இந்தப் புகைப்படங்கள் இரண்டும் வீடியோ காட்சி ஆதாரத்தையும் கொண்டு படையினர் பாலச்சந்திரனை கொலை செய்தார்கள் என்பதனை நிரூபிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கூறும் கருத்தை வைத்துப் பார்த்தால் , பேய் அல்லது பிசாசு ஒன்று தான் பாலச் சந்திரனை கொலைசெய்திருக்கவேண்டும் என்று இவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

-http://www.athirvu.com

TAGS: