இலங்கை அகதிகள் நாடு திரும்ப இந்தியாவின் உதவி அவசியம்!

tamilnadu_refugees_001இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தமிழ் அகதித் தொகுதியினர் விரைவில் இலங்கை திரும்பவுள்ளனர்.

இந்தநிலையில் அகதிகள் மீண்டும் விரைவாக இலங்கை திரும்புவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்திய அரசாங்கத்திடம் இருந்து வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி திட்டங்களை எதிர்ப்பார்ப்பதாக இலங்கையின் சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் வி சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

தெ ஹிந்துவிடம் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சென்னை மற்றும் மதுரையில் இருந்து 26 பெண்கள் உட்பட்ட 41 அகதிகள் இலங்கை திரும்பவுள்ளனர்.

இவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் அதிகளுக்கான ஆணையாளர் அலுவலகம் இலவச விமான அனுமதிச்சீட்டுக்களை வழங்கியுள்ளது.

அத்து;டன் குடிப்பெயர் கொடுப்பனவாக ஒருவருக்கு 75 டொலர்களும் போக்குவரத்துக்காக 19 டொலர்களும் உணவற்ற அன்பளிப்பாக 75 டொலர்களும் வழங்கப்படவுள்ளன என்று சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்குகிழக்கில் 1.37 லட்சம் வீடுகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 46ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணித்து வருகிறது. இவற்றுள் 43ஆயிரம் வீடுகள் 2015, டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டன.

மேலும் 2200 வீடுகள் அடுத்த மாதங்களுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தமது அமைச்சின்மூலம் இரண்டு மாகாணங்களிலும் 65 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளதாக சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.

முதல் வருடத்தில் 11 ஆயிரம் வீடுகளும் அடுத்த மூன்று வருடங்களில் முறையே 18ஆயிரம் வீடுகளும் கட்டப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: