வளை குடா தேசத்தில் சவுதி அரேபியாவும், ஈரானும் ராணுவத்தில் சக்தி வாய்ந்த நாடுகளாகும். ஈரானிடம் அணுகுண்டு உள்ளது .கொள்கை அடிப்படையில் இவ்விரு நாடுகளும் எதிரெதிர் கொள்கை கொண்ட கீரியும் பாம்பும் நாடுகளாகும்.
ராணுவத்தில் சக்தி வாய்ந்த இவ்விரு நாடுகளும் மோதிக் கொண்டால் இவ்விரு நாடுகளுக்கும் பெருமளவு சேதாரம் ஏற்படும். ஈராக்கிலும், லிபியாவிலும், சிரியாவிலும் ஓடிய இரத்த ஆறுகள் இவ்விரு நாடுகளிலும் ஓடும். அண்மையில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 47 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மற்றும் அதில் ஷியா பிரிவின் தலைவர் நிமல் அல் நிமிரும் அடக்கம்.
சவுதி சிறையில் 250 பேர் கொலை
மற்றும் 250 பேரை சிறைக்குள் விசவாய்வு அடித்து கொண்டு விட்டார்கள் . இது உலகிற்கு பெரிதாக வெளிவராத மறைக்கப்பட்ட விடயம். ஆனால் இந்தக் கொலை பற்றிய தகவல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் ஆதாரமாக உள்ளது.
இந்த 250 பேரில் உலமாக்கள் மார்க்க தலைவர்கள் நிறைய உள்ளார்கள். காரணம் இஸ்ரேவல் இல்மனாட்டிகள் 6 பேர் அரைகுறை ஆடையுடன் தமாம் நகரில் அல்குபார் வீதியில் நடந்து சென்றுள்ளார்கள் .
இந்த அரைகுறை ஆடையுடன் சென்றதை அங்குள்ள மக்கள் கண்டு விட்டார்கள். அந்த எதிர்ப்பினால் இன்மனாட்டிகள் சவூதி பொலிசால் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு உடன் விடுவிக்கப்பட்டார்கள். இந்த தமாம் நகரில் அமெரிக்க படைத் தளம் உள்ளது.
இந்த அரைகுறை ஆடை விடயத்தை பற்றி 250 (முத்தப்பா) மார்க்கத் தலைவர்கள் மற்றும் பள்ளி முக்கியஸ்தர்கள் தலைமையில் கூடி ஆராய்ந்துள்ளார்கள் .கடும் கண்டனம் கிளம்பியது.
இந்த ஓன்று கூடலை அறிந்த மாமன்னார் அரசு அந்த 250 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்து எவ்விதமான கேள்வியும் இன்றி நச்சு வாயுக்கள் அடித்து கொன்று விட்டார்கள். இந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்துள்ளது.
இப்படியாக அரசின் அடக்குமுறை அங்கு மிகமோசம் . முஸ்லிம் நாடு என்றுதான் பெயர் .இலங்கை இந்தியாவை மிஞ்சிய மனித உரிமை மீறல் அங்கு மிகவும் மோசம்.கேள்வி கணக்கின்றி உலகுக்கு தெரியாமல் அங்கு கொலைகள் அதிகம்.அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை யாராவது கேட்டால் மறுகணம் ஜெயில்தான்.
மனித உரிமை மீறல் பற்றி அண்மையில் சவுதி மன்னர் அரசு “சமர் வடாவி ” என்னும் (இளம் பெண்) மனித உரிமை காப்பாளரை கைது செய்துள்ளது.இந்தக் கைதைக் கண்டித்து உலக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டெர்நசனல் கண்டனம் தெரிவித்துள்ளது..இந்தப் பெண்மணியை சவுதி அரசு தலை வெட்டி கொல்லும் அதிக வாய்ப்புள்ளது .
இவர் றாபி படாவி என்னும் சவுதி மனித உரிமை பாதுகாவலரின் சகோதரியாவார்..இந்தப் பெண்ணின் கணவர் மற்றும் றாபி படாவி ஆகியோர் ஏற்கனவே சிறையில் உள்ளார்கள்.மனித உரிமை பற்றி யாராவது கேட்டால் அரசுக்கு எதிராக சதி என்னும் சொல்லை பயன்படுத்தி ஜெயிலுக்குள் பொது இடத்தில் கொலை செய்து விடுகின்றார்கள்.
ஈரானில் சவுதிஅரேபியா தூதரகம் தாக்குதல்
ஆனால் இந்த 47 பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்த விடயத்தினால் ஈரானில் உள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் சவூதி அரேபிய தூதரகம் தாக்கப்பட்டது.
இதற்கு பதிலாக சவூதி அரேபியாவிலுள்ள ஈரான் தூதரை திருப்பி அனுப்பியது. சவூதி அரேபியா மற்றும் ஈரானின் உறவுகள் முறிந்தன. சவூதி அரேபியாவை தொடர்ந்து அரபு நாடுகளும் ஈரானுடனான உறவை முறித்துள்ளது.
சமாதானத் தூதுவராக இந்தோனேசியா
அதன்பிறகு இவ்விரு நாடுகளுக்கும் இடையில் போர் சூழல் உருவானது. சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் சமாதான முயற்சியை மேற்கொள்ளப்போவதாக இந்தோனேசியா கூறியது.
இந்தோனேசியா இவ்வாறு கூறிய பிறகு இந்தோனேசியாவில் தொடர் குண்டுவெடிப்புகள் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
சவுதி அரேபியாவையும், ஈரானையும் ஒன்றிணைக்கப் போவதாக சொன்னவுடன் தொடர் குண்டுவெடிப்பு நடக்கிறது என்றால் நீ வாயப் பொத்திக்கிட்டு இருக்கிறாயா இல்லை உன்னுடைய நாட்டையும் சின்னா பின்னமாக்கவா என்று இந்தோனேசியாவுக்கு இந்தக் குண்டுவெடிப்பின் மூலம் மறைமுகமாக ஒரு மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இஸ்ரேவல் செல்லப்பிள்ளைகளான ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேவேல் மொசாட்டின் வழிகாட்டலில் இந்த கொலை வெறித் தாக்குதலை செய்துள்ளார்கள் .
அப்படியென்றால் சவுதி அரேபியாவும் ஈரானும் மோதிக்கொள்ள வேண்டும் என்று சதிகார நாடுகளான அமெரிக்கா இஸ்ரேவேல் அலாதி பிரியம் கொண்டுள்ளன.
அரபு நாடுகளில் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழ்ந்த ஈராக், லிபியா, சிரியா என்று ஒவ்வொரு நாடுகளையும் முற்றிலுமாக நாசப்படுத்தியது போதாதென்று மீதமுள்ள சவூதி அரேபியாவையும், ஈரானையும் மோதிக்கொள்ள அலாதி பிரியம் கொண்டுள்ளன.
தற்போது நாட்கள் நகர்ந்தாலும் இந்த இரண்டு நாடுகளும் விரைவில் ஒரு உக்கிரமான போருக்கு நகர்த்தப்பட்டு வருகின்றது. இரண்டு நாடுகளிலும் பெருத்த அழிவுகள் சேதங்கள் வரும் என்பதை நாம் எத்தி வைப்போம்.
ஆனால் கீரியும் பாம்பும் என்று உள்ள சவுதி அரேபியாவும், ஈரானும் மோதிக்கொள்ளாமல் இவ்விரு நாடுகளும் இஸ்ரேலை முதலில் காலிப்பன்ணினால் அரபு நாடுகள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்து விடும்.
ஆனால் கீரியும் பாம்பும் இணைந்து செல்லக் கூடிய எந்தவொரு வாய்ப்பும் இல்லை ..இனிமேல் இறைவன் விட்ட வழி.
சவூதி வறிய நாடாய் போய் விடும்
ஒரு காலத்தில் கச்சா எண்ணையில் உலகம் தங்கியிருந்தது அந்நிலை இப்போது இல்லைஅதை வைத்துக்கொண்டுதான் அரபு நாடுகள் பெரும் ஆட்டம் போட்டன .போட்டு வருகின்றன.
உலகில் தன்னை விட பணக்காரன் இல்லை என்ற மமதையில்தான் தங்கள் சன்னி மக்களையே அழித்து முடக்கியது அதில் ஈராக் எகிப்து பாலஸ்தீன் எமன் சிரியாவும் அடங்கும் இப்போது ஐ.எம்.எப் இன்டர்நேஷனல் மொநிடரி பண்ட் . கூற்றுப்படி இன்னும் ஐந்து வருடங்களில் சவூதி பிச்சக்கார நாடாய் போய்விடுமாம் காரணங்கள் .
ஒயில் பர்றேல் 132 டாலரில் இருந்தது தற்போது 28-30 க்கு வந்துள்ளது சவூதி பணம் எல்லாம் அமெரிக்க ஆயுதம் வாங்கி அனைத்தும் துருப் பிடித்து பிடித்து விட்டது. இப்போது அமெரிக்காவில் எண்ணை ஸ்டாக் அதிகம் கூடிவிட்டது சோலர் பவர் மின்சார வாகனங்கள் அதிகரித்துவிட்டன.
நாட்டில் குழப்ப நிலை 30 வீதமான ஷீயாக்கள் சவுதியில் அந்நாட்டு மக்களாக உள்ளார்கள் பக்கத்துக்கு நாட்டு எமேனானோடு நடாத்திய போர் இப்போது புலியின் வாலைப் பிடித்த நிலையில் உள்ளது. மன்னர் குடும்பதுக்குள் போட்டியும் பொறாமையும் ..ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்ல உள்ளார்கள்.
இந்தியா தனது முழு சவூதி வேலையாட்களையும் தனது நாட்டுக்கு திருப்பி எடுக்க ஆயத்தங்கள் செய்கின்றன… இப்போது சவுதியும் ஈரானும் மோதிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதை நன்கு சிந்தித்துப் பாருங்கள்.
இஸ்ரேல் குறியே சவுதி ஒயில் வளத்தை அளிக்கவேண்டும் என்பதே. எண்ணெய் வளம் அழிந்தால் சவுதிஅரேபியா கையேந்தும் நிலைக்கு வராதா ? வரும் …..
எம்.எம்.நிலாம்டீன்
-http://www.tamilwin.com


























அற்புத பதிவு நண்பரே …