யாழில் வடிவேலு பாணியில் சாராயக் கடையை திறக்க முயன்ற குடிகாரர்கள் ?

axaxயாழ் திருநெல்வேலிப் பகுதியில் வடிவேலு பாணியில் முடியிருந்த சாராயக்கடையைத் திறக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த நேரத்தின் பின்னர் மூடப்பட்ட சாராயக்கடையைத் திறந்து தமக்கு சாராயத்தைத் தந்துவிட்டு மீண்டும் மூடுமாறு சாராயக்கடைக்கு காவலுக்கு நின்றிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டுள்ளனர் இருவர். அவர் அத்ற்கு மறுக்கவே அவ்விடத்தில் சிறு நீர் கழித்து அசிங்கம் செய்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் மூடியிருந்த சாராயக் கடையின் கதவுகளை , கைகளால் திறக்க முற்பட்டுள்ளார்கள். அது பலனளிக்கவில்லை. ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் , அவர்கள் அங்கேயே புரண்டு படுத்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. காவலாளி பொலிசாருக்கு கொடுத்த தகவலை அடுத்து. பொலிசார் வந்து அவர்களை அலேக்காக தூக்கிச் சென்றுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

-http://www.athirvu.com

TAGS: