போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தை நிராகரிக்க முடியாது! விஜித ஹேரத்

vijitha-herathஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை ஏற்றுக் கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை நிராகரிக்க முடியாது என்று விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், இன்றைய சிங்கள வாரப் பத்திரிகையொன்றுக்கு அவர் பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக கலப்பு நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானமாகும்.

இத்தீர்மானத்தை ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேனவும் ஜெனீவாவில் வைத்து ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது அதனை எதிர்க்கின்றார். எதிர்ப்பு தெரிவிப்பதாயின் அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து தற்போது கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூச்சலிடுவதால் பலன் இல்லை.

ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை இப்பிரச்சினை உள்நாட்டில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தியுள்ளோம். இலங்கையில் இதுபோன்ற விசாரணைகளை மேற்கொள்ளுமளவுக்கு திறமையானவர்கள் இருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அதற்கான சந்தர்ப்பத்தை தவற விட்டுள்ளது.

தற்போது போர்க்குற்றங்கள் தொடர்பான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர முடியாது. அரசாங்கத்தின் பலவீனமே அதற்கான காரணமாகும் என்றும் விஜித ஹேரத் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட காரணம் – விஜித ஹேரத்

ஆளும் கட்சிக்கள் நிலவி வரும் உள்முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் காரணம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் உள் முரண்பாடுகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ச்சிhயக ஒத்தி வைக்கப்படக் காரணமாகும்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நிலவி வருகின்றது.

இரண்டு பிரதான கட்சிகளுக்கு இடையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் உரிய இணக்கப்பாடற்ற நிலைமை நீடிக்கின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை களைந்து தேர்தல் நடத்த சாத்தியமுண்டு.

எனினும் அரசாங்கம் குறைபாடுகளை துரித கதியில் களைவதற்கு விரும்பவில்லை.

ஆளும் கட்சிக்குள் நிலவி வரும் உள் முரண்பாடுகளின் உள்ளுராட்சி மன்றங்கள் கிரமமாக இயங்குவதில்லை எனவும் இதனால் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்hளர்.

-http://www.tamilwin.com

TAGS: