இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இலங்கையில் உருவாக்கப்பட இருக்கும் அரசியலமைப்பு தொடர்பாக அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் குழுவிற்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் சார்பாக கருத்துக்களை முன்வைப்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புலமையாளர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அரசியல் யாப்பு சீர்திருத்தம் பற்றிய தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அரசியல் பொருளாதாரத்துறை விரிவுரையாளர் அப்பாத்துரை குமாரவேல் வழங்கிய புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இலங்கையில் இதுவரையும் நடைமுறையில் இருந்த அரசியல் யாப்புகளையும் இவ் யாப்புக்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்று நிகழ்வுகளையும் மிகவும் தெளிவான முறையில் புலமையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் உட்பட யாழ்ப்பாண பட்டப்படிப்புக்கள் அரசியல் பொருளாதாரத்துறை விரிவுரையாளர் அப்பாத்துரை குமாரவேல், ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் சின்னராசா
மற்றும் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் சோதிநாதன், மூத்த ஊடகவியலாளர் யோகேந்திரநாதன்,
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் முருகவேல், சட்டவாளர் திருமதி விஜயராணி அரச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மாவட்ட கல்வி புலமையாளர்கள் எனப்பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
-http://www.tamilwin.com



































