மலையகத்தில் நடந்து வந்த ஜமீன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி! வடிவேல் சுரேஷ்

vadivel_suresh_001மலையகத்தில் நிலவி வந்த ஜமீன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் இன்று 7பேர் அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பெங்கடன் சின்ன தோட்டத்தில் மலையக வரலாற்றில் முதல்முறையாக ஒரே இடத்தில் 114 வீடுகளை அமைத்து நவீன கிராமம் அமைக்கும் அடிக்கல் நாட்டும் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு அரசியல் தலைவர்களால் விடுக்க வாக்குறுதிகள் நிறைவேறப்படவில்லை. இனிக்கும் சீனியை போல் வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால் இது நிறைவேற்றம் அடையவில்லை இனிக்கவும் இல்லை. ஆனால் அமைச்சர் திகாம்பரம் வழங்கிய வாக்குறுதி இப்பொழுது. மக்களுக்கு இனிக்கின்றது.

வெள்ளளையர்கள் காலத்தில் மலையக மக்களுக்கு வழங்கிய வாழ்விட விலாசம் இன்று புதிய கிராமம் அமைத்து இவ்விலாசம் மாற்றப்பட்டுள்ளது. 65 வீதம் பெண்கள் மலையகத்தில் தொழிலாளர்களாக இருக்கின்றனர். இம்மக்களுக்கு சேவையாற்றும் அமைச்சின் செயலளார் ஒரு பெண்மணி என்பதில் நாம் பெறுமைக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்துவரும் உலகில் மலையக மக்களுடைய அபிவிருத்திகளும் முகப்புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கு மலையகம் இந்த நல்லாட்சி அரசில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

மலையகத்தை மாற்றுவோம் என ஆரம்ப காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும் ஒரு திருப்புமுனை திகாம்பரத்தால் இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளது. அத்தோடு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம் அடைந்து வருகின்றது.

இதற்கு காரணம் நீங்கள் அளித்த வாக்கின் ஊடாக இன்று நாடாளுமன்றத்தில் ஏழு பேர் ஒன்றாக இருக்கின்றோம் என்பது தான். முன்னைய அரசாங்க காலத்தில் நாடாளுமன்ற “ஹான்சாட்” அறிக்கையை எடுத்து பாருங்கள். மலையகம் தொடர்பாக என்ன பேசப்பட்டது என்று இப்பொழுது இவ்வறிக்கையை எடுத்து பாருங்கள். எவ்வாறெல்லாம் மலையக அபிவிருத்திக்கு பேசியிருக்கின்றோம் என்று.

தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வாக 2500 ரூபாவை தருவாதாக தொழில் அமைச்சு எம்மிடம் உறுதியளித்தது. பெப்ரவரி மாதம் 10 ம் திகதி இதன் மாற்றத்தை காண்பதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி அவதானத்துடன் இருக்கின்றது.

மலையக மக்களுக்காக இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் ஒலிக்காத குரல் 2015ஆம் ஆண்டு தான் ஒலிக்கின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் யானை சின்னத்திற்கு அளித்த வாக்குகள் வீண் போகவில்லை.

கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர கோடி கணக்கில் பேரம் பேசினார்கன் ஆனால் நாங்கள் 7 பேர்ச் காணியும் தனி வீடுகள் வேண்டும் என்று பேரம் பேசினோம். இது மலையக எதிர்பால சந்ததினரை இலக்க வைத்து பேசப்பட்டதாகும் என்பதை இத்தருணத்தில் கூறி கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: