ரிம2.6 பில்லியன் நன்கொடை விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றமற்றவர் என்ற சட்டத்துறைத் தலைவரின் (ஏஜி) அறிவிப்பு நாட்டின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் உந்துவிசையாக இருக்கும் என அமைச்சர் ஒங் கா சுவான் கூறினார்.
“அது (ஏஜி முகம்மட் அபாண்டி அலியின் அறிவிப்பு) ஓரளவுக்கு உதவும். அங்கிருந்து நிலைமை மேம்படும் என்று நம்புகிறேன்.
“சந்தேகங்களும் நிச்சயமற்ற நிலைமையும்தான் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கெடுத்து வைத்திருந்தன……அவர்கள் முதலீடு செய்ய முன்வரவில்லை.
“அந்த நம்பிக்கையைத் திரும்ப கொண்டுவர வேண்டும்”, என்றாரவர். ஒங் கா சுவான் இரண்டாவது அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சராவார்.
இந்த சீனிவாசனுக்கு யார் எக்கேடு கெட்டாலும் என்ன–தனக்கு எலும்பு துண்டுகள் கிடைக்குமே. இதனால் தானே அக்காலத்தில் இருந்து வியாபார பணக்கார சீனிகள் இந்த அரைவேக்காடு மலாய்க்காரனுக்கு ஆதரவு. நம்ம ஊர் ராஜாக்கள் கள்ளுக்கடையிலும் அக்கறை இல்லாமலும் நம்மவர்களின் வருங்காலத்திற்கு குழி நோண்டி விட்டனர் உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்று.
இப்படி பொய் சொல்லிவிட்டால் எல்லாம் நல்லதாக நடந்து விடும் என்ற நப்பாசையில் வரும் வார்த்தை. மக்கள் இன்று விவேகமான முறையில் சிந்திக்க வல்லவர்கள். பொய்யை பொய் என்று அறிந்து பொய்யான அரசியல்வாதிகளைப் புறந்தள்ளக் கூடியவர்கள். இந்த பொய்யின் உருவகம் அடுத்த தேர்தலில் தெரியும்.
இனி உங்களுக்கெல்லாம் “வணிக நன்கொடை”-க்கு பஞ்சம் இருக்காது என்பதை சூசகமாக கூறி விட்டீர்கள்.
Mr.தேனீ! எதிர்வரும் தேர்தலில், ஆளும் கட்சியாயினும் சரி, எதிர்கட்சியாயினும் சரி, அல்லது சுயேச்சை வேட்பாளராய் யிருந்தலும் சரி, மக்களுக்காக, அதுவும் ஏழை மக்களுக்காக உழப்பவனாய் இருந்தால், அவனுக்கு ஒட்டு போடுங்கள். நாடும் உருப்படும். மக்களும் தெம்புடன் வாழ்வார்கள். அனைத்து அரசியல் கட்சிகளிலும், பெரும்பாலானவர்கள், திருட்டு பச்சோந்திகள்.
வணிக நன்கொடை பில்லியனா ? த்ரிலியனா ?
நஜிப் நன்கொடை விவகாரம் தீர்ந்தது வணிகத்தை ஊக்குவிக்கும் // முறையாக வணிகம் செய்து 1 mdb வட்டியாவது செலுத்த முடியும்மா தம்பி ஓங் காசுவான் ? அம்னோ bn அரசியல் விளையாட்டை வெளியில் சொல்ல முடியாமல் மக்கள் பல்லை இளித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் !
ong kah suan ……… லு………