வடக்கு முதல்வரை கொலை செய்யும் வெள்ளோட்டமா?

vikneshwaran_002வட மாகாண முதலமைச்சர் நீதிபதி விக்னேஸ்வரனின் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இது திட்டமிட்டு நுணுக்கமாக செய்யப்படுள்ளதாகவே பார்க்கப்படுகின்றது. முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிசாரே உடந்தையாக இருந்துள்ளனர்.

இது என்ன நோக்கில் இப்படி நடந்துள்ளார்கள் என்பது பற்றி ஒரு ஓய்வு பெற்ற தமிழ் நீதிபதி மூலமாக கண்டறியப்பட வேண்டும்.

யார் தான் எதை சொன்னாலும் வாகனத்தின் பாதுகாப்பு என்பது சாரதியின் முடிவிலேயே தங்கியிருக்கின்றது இருந்தும் பொலிசார் ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க சைகையும் காட்டியுள்ளனர்.

தெய்வாதீனமாக ரயில் எதிர்பார்க்கப்பட்டதை விட காலதாமதமாக புகையிரதம் வந்துள்ளதால் மிகப் பெரிய ஆபத்தில் இருந்து முதல்வர் காப்பற்றப்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை.

இரண்டாவது சம்பவம்

இது முதல்வருக்கு ஏற்பட்ட இரண்டாவது சம்பவம் என்றும் அறியவருகின்றது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பற்ற கடவையில் முதலமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.

ரயில் வருவதற்கு நீண்ட நேரமிருப்பதாக சொல்லப்பட்டே முதல்வர் கடவையில் கடக்கச் செய்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் முதல்வர் தனது சொந்த பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது மிகக்குறைவு என்றும் இவ்வாறான நிலை சதிகாரருக்கு வாய்ப்பாக இருப்பதாகவும் பார்க்கின்றோம்.

இப்படியாக 3-4 தடவை முதல்வரின் வாகனத்தை புகையிரதக் கடவையில் கடக்க விட்டு ஒரு நாளைக்கு உண்மையாக புகையிரதம் வரும் போது உண்மையாக முதல்வரின் வாகனத்தை புகையிரதத்தில் மோத விடும் திட்டமாக இருக்கலாம்.இந்த சந்தேகத்தை யாரும் தட்டிக் கழிக்க முடியாது.

உண்மையிலேயே புகையிரதம் நெருங்கி வரும்போது அதனை தாண்டிச்செல்ல முற்படும் வாகனங்கள் கடவையில் ஏற்படும் காந்தபுல தாக்கத்தால் வாகன இயந்திரம் இயக்கம் நின்றுவிடும் என்பதோடு வாகனத்தை மனிதவலு மூலம் தள்ளியும் கொண்டு செல்லமுடியாது.

இவ்வாறு அண்மையில் யாழில் புகையிரத கடவையை கடந்த பொறியியலாளர் ஒருவரும் கிளிநொச்சியில் ஒரு மோட்டார் சையிக்கிளுடன் சென்ற ஒருவரும் வாகன இயக்கம் நின்றமையால் உயிரிழந்துள்ளமைமையை யாரும் மறந்து விட முடியாது.

இனவழிப்பு தீர்மானம், தேர்தலில் நேரடியாக த.தே.கூட்டமைப்பை ஆதரிக்காமை,தொடர்ந்தும் கூட்டமைப்பு தலைமையின் இணக்க அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்காமை.

தமிழ் கைதிகளின் விடுதலை பற்றிய பார்வை மற்றும் தொடர்ந்தும் வடக்கு வரும் ஐ.நா மற்றும் உலகநாடுகளின் பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் தமிழர் உரிமை மற்றும் நிரந்தர தீர்வு தொடர்பில் தனது உறுதியான நிலைப்பாட்டினை வலியுறுத்தி வருவதை விரும்பாத சில சக்திகளின் திட்டமாக செயலாக இது இருக்கலாமா? என்று பெருத்த சந்தேகம் இருக்கின்றது.

இது போன்றே உறுதியாக குரல்கொடுத்து வந்த மன்னார் ஆயர் தள்ளாடிமுகாமிற்கு நிகழ்வொன்றிற்காக அழைக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட உணவில் நஞ்சூட்டி வழங்கியதன் பின்னரே அவர் நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டு உரிமைக்குரலிலிருந்து ஒதுங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் என்ற செய்திகளும் உள்ளது.

முதல்வரின் பாதுகாப்பில் தமிழ் பொலிஸ் வேண்டும்

தற்போது வடகிழக்கில் உள்ள தமிழ் போலீஸ் அதிகாரிகளை இனம் கண்டு அவர்கள் மூலமாக முதல்வருக்காண பாதுகாப்பில் அமர்த்தப்பட வேண்டும்.

தற்போது முதல்வரின் பாதுகாப்பில் இருந்து சிங்கள போலீஸ் அணி மாற்றப்பட வேண்டும் .முதல்வரின் நாளாந்த பயணப் பாதை நாளாந்தம் மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக புகையிரக் கடவைகள் பயணத்தில் போது முதல்வரின் வாகனச் சாரதி மற்றும் போலீஸ் அணி மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

எம்.எம்.நிலாம்டீன்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: