மக்களின் இழப்பிற்கு புலிகளா? இராணுவமா காரணம்? சர்வதேச உதவி தேவை! ரணில்

ranil_kuruvayoor_002இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டு தொடர்பிலான கலந்துரையாடல்களில் சர்வதேச நாடுகள் பங்கேற்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதி தீர்ப்பு இலங்கையின் நீதியமைப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கேரளாவின் குருவாயூருக்கு இன்று வழிபாட்டுக்கு சென்றிருந்த நிலையில் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் அமரிக்கா, மனித உரிமை அமைப்புக்கள் என்பன போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடமுடியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இறுதி தீர்ப்பு இலங்கையின் நீதி அடிப்படையிலேயே இருக்கும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை, இறுதிப்போரின்போது பொதுமக்களின் இழப்புக்களுக்கு படையினரா? அல்லது விடுதலைப்புலிகள் போன்ற அமைப்பினரா? காரணம் என்பதை உறுதிசெய்துக்கொள்ளவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதற்காக சர்வதேசத்தின் உதவி அவசியப்படுகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

தொடர்புடைய செய்தி

குருவாயூர் ஆலயத்தில் ரணில் பூஜை!

TAGS: