ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக வழக்கு

zeid-ul-hussain (1)ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளில் பிரதான கொள்கையை மீறியமை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வெளிநாடுகளில் உள்ள சிங்களவர்கள் அடங்கிய குழுவொன்று தீர்மானித்துள்ளது.

இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட்டதன் மூலம் மனித உரிமை ஆணையாளர் ஐ.நா கொள்கையின் 13.2 பந்தியை மீறி நடந்து கொண்டுள்ளதாக கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது குறித்து மூன்று வெளிநாட்டு நீதிபதிகளிடம் கலந்துரையாடியதாகவும் இந்த குற்றச்சாட்டின் கீழ் மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என அவர்கள் கூறியதாகவும் மேற்படி குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமை ஆணையாளருக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் வழக்கு இதுவாகும்.

கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் சிங்களவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

-http://www.tamilwin.com

TAGS: