முன்னாள் போராளிகளின் நல்வாழ்வுக்காக புலம்பெயர் சமூகம் உதவிடத் தயாரா?

mano_lankasri_interview_001முன்னாள் போராளிகளின் நல்வாழ்வுக்காக மறுவாழ்வுக்காக பொது நிதியத்தை உருவாக்கி செயற்படுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்களானால் அவர்களுக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றேன் என தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டு கலந்துரையாடல் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி செய்திச் சேவைக்கு பிரத்தியோகமாக வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

புலம்பெயர் தமிழ் சமூக சகோதரர்களுக்கு ஒரு பாரிய கடைப்பாடு இருக்கின்றது. எவ்வாறு இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக தலைமை தாங்கிக்கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் கடைப்பாடு இருக்கின்றதோ அதற்கு இணையான கடைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு.

முழு இலங்கையில் வாழுகின்ற தமிழர்களுக்காக போராடிய முன்னாள் போராளிகளை கைதூக்கி விடவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.

அவர்கள் துன்பகரமான கஸ்டமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் நான் சொன்னதைபோன்று எமது இன்றைய நாட்களுக்காக அவர்களது நேற்றைய நாட்களை இழந்தவர்கள் எங்களுக்காக தங்களை இழந்தவர்கள் அவர்கள் அவர்களது நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளது.

எனவே முன்னாள் போராளிகளின் நல்வாழ்வுக்காக மறுவாழ்வுக்காக பொது நிதியத்தை உருவாக்கி செயற்படுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் முன்வருவார்களானால் அவர்களுக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றேன் எனக் கூறியுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: