ஆளணி வளத்தை இழந்துவரும் மலையக பெருந்தோட்டங்கள்!

malaiyakam_perunthoddam_001மலையக பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்கான அளணி வளம் பாரியளவில் இழக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மலையகப் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதனை இளைஞர்கள் பெரிதும் தவிர்த்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் 170000 ஹெக்ரயர் பரப்பில் பயிரிடப்பட்ட தேயிலை நிலங்களில் இந்திய வம்சாவளி மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

எனினம், அண்மைய ஆண்டுகளில் பெருந்தோட்டங்களில் தொழிலாளிகளாக கடமையாற்றவதனை இளைஞர்கள் தவிர்த்து வேறும் தொழில்களை தெரிவு செய்து வருகின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்டங்கள் பாரியளவில் ஆளணி வளப் பற்றாக்குறையை எதிர்நோக்க நேரிடும்.

இளைஞர் யுவதிகள் பெருந்தோட்டங்களில் தொழிலாளிகளாக உழைப்பினை வழங்க விரும்புவதில்லை எனவும் தி இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: