சமஷ்டி என்றால் உடனே பிரிந்து செல்வது என்ற அர்த்தம் இல்லை- விளக்கம் கொடுத்த விக்கி !

vikneswaran_4பிரித்தானியாவில் , எப்படி அயர்லாந்தும் ஸ்காட்லாந்து தேசமும் இணைந்து சமஷ்டி முறையில் ஆட்சி நடத்துகிறதோ. அதுபோல ஒரு அலகை இலங்கை தமிழர்களின் தீர்வாக கொண்டுவர இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதி கூடிய உச்ச உரிமைகளோடு வாழ சமஷ்டி முறை ஒரு தீர்வாக அமையலாம். காணி , பொலிஸ் அதிகாரம் அடங்கலாக தமிழர்களை தம்மை தாமே ஆழும் ஒரு அலகாக இந்த சமஷ்டி ஆட்சி முறை அமைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதனையும் சிங்கள அரசியல்வாதிகள் கொடுக்க தயார் இல்லை. சமஷ்டியை வழங்கினால் , ஒரு காலத்தில் வட கிழக்கு மக்கள் பிரிந்து செல்ல முடிவெடுத்து பொது வாக்கெடுப்பு நடத்தினால்.

வாக்குகள் பிரிந்துசெல்ல சாதகாம அமையுமேயானால். பின்னர் வட கிழக்கு பிரிந்து செல்லும் அபாயம் உள்ளது என்று சிங்கள தலைவர்கள் சிலர் சிங்கள மக்களிடையே செய்திகளை பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். இது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்கள் தனது கருத்தை கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்துசெல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: